LATEST ARTICLES

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாமங்கடை ஈஸ்வரி வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, வெகன் ஆர் ரக மகிழூர்தியும் ஸ்போர்ட்ஸ் ரக அதி சொகுசு மகிழூர்தி ஒன்றுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் உயிரிழந்த நபர் வெகன் ஆர் ரக மகிழூர்தியில் பயணித்த பெண்ணொருவர் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். குறித்த வாகனத்தின் சாரதியான உயிரிழந்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி...

யாழில் குடும்பங்களிற்கு இடையே கைகலப்பு!! சிறுமியின் கழுத்தில் பாய்ந்த கத்தி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே படுகாயமடைந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியது. அதன் போது ஒருவர், பிறிதொருவரை கத்தியால் குத்த முனைந்த போது, அங்கிருந்த சிறுமியின் கழுத்து பகுதியில் கத்தி...

யாழில் வீதியால் செல்லும் யுவதிகளுடன் சேட்டைவிட்ட 4 மன்மத ராசாக்களிற்கு நேர்ந்த கதி

யாழில் வீதியால் செல்லும் யுவதிகளுடன் சேட்டை விட்ட நான்கு இளைஞர்கள் நன்கு கவனிக்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. கலட்டி வீதி பகுதியில் தினமும் ஒன்றுகூடும் மன்மதராசாக்கள் சிலர், இந்த வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டை விடுவதையே நாளாந்த கடமையாக எண்ணி செயற்பட்டு வந்தனர். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல், தமது வீடுகளில் அந்த பெண் பிள்ளைகள் முறையிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த பெண்களின் உறவினர்களான இளைஞர்கள் ஒன்றுகூடி, சேட்டையிலீடுபட்ட நான்கு பேரையும் நையப்புடைத்து, மேலதிக...

எட்டு வயது சிறுமியை கடத்திய இளைஞர் மடக்கிப் பிடிப்பு

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை உறவினர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முந்தினம் (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முள்ளிப்பொத்தானை - யுனிட் 10யைச் சேர்ந்த பாத்திமா நஸ்னா என்ற 8 வயது சிறுமியை திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் தனது பாட்டியுடன் விட்டுவிட்டு மற்றைய பெண் மருந்து எடுப்பதற்காக பாமசிக்கு சென்றபோது அருகில் உள்ள இளைஞர் அனுமதியில்லாமல் பாட்டிக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற குற்றச்சாட்டிற்காக இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை...

திருமணமாகாத இளம் பெண்ணின் விபரீத விளையாட்டு!! பிறந்து ஒருநாளான சிசு கொன்று புதைப்பு

நோர்வுட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்பிற்குள், பிறந்து ஒரு நாளான சிசு புதைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நோர்வுட் பொலிஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். திருமணமாகாத 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு குழந்தயை பிரசவித்து புதைத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும் இரண்டாவது முறையாக, புதைக்கப்பட்ட குழந்தையை பிரசவித்துள்ளமைக்கான...

மனைவியை மண் வெட்டியால் அடித்து கொலை செய்து புதைத்த கணவன் கைது

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (11) மாலை கண்டெடுக்கப்பட்டதாக தம்பலகாமப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் குடியிருந்து வந்த குடும்ப பெண்ணை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து உரிய குடும்பப் பெண்ணின் கணவரிடம் விசாரணை செய்யப்பட்டபோது தனது மனைவியான இந்திரானி மில்வான வயது (51) எனும் பெண்ணை மண்வெட்டியால் தாக்கி தனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப்...

வயிற்றில் கட்டி!! சத்திரசிகிச்சைக்கு சென்ற பெண் பலியான சோகம்!! யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

கர்ப்பப்பை கட்டி காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத் துயர சம்பவம் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடந்துள்ளது. வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த வினோதன் பரமேஸ்வரி, தங்கா என அழைக்கப்படும் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக இறந்துள்ளார். கடந்த வாரம் 2ம் திகதி வயிற்று குற்று காரணமாக இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பரிசோதித்த வைத்தியர்கள், வயிற்றில் பாரிய கட்டி இருப்பதனையும் அதனை அகற்றாவிட்டால் ஏற்படும் பாதிப்புகளையும் தெரிவித்துள்ளனர். பின்னர் மேலதிக பரிசோதனைகளில் இவரிற்கு...

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று 11/06/2020 இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் வள்ளிபுனம் மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் தேவிபுரம் பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஐன் என்ற சிறுவன் ஆவான். நேற்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்ட சிறுவனை காணவில்லை என உறவினர்களின் உதவியோடு தேடியபோது கிணற்றுக்குள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை உறவினர்களின் உதவியோடு மீட்டு புதுக்குடியிப்பு வைத்தியசாலைக்கு எடுத்து...

யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!! -அலுவலகம் உடைப்பு: பணியாளர் மீது வாள்வெட்டு

யாழ் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.40 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூறிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த கண்காணிப்பு கமெராக்களை அடித்துடைத்துள்ளனர். இதன் பின்னர்...

மிஸ் கோல் காதலாம்!! யாழில் யுவதி கடத்தப்பட்டு மூவரால் கூட்டு பாலியல் பலாத்காரம்

தவறிய அழைப்பொன்றினால் (மிஸ் கோல்) யாழில் யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாகியுள்ளார். அவரை 3 இளைஞர்கள் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அண்மையில், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து கொடிகாமத்திற்கு காதலர்களை சந்திக்க சென்ற இரண்டு யுவதிகள் கடத்தப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தப்பித்து, பொதுமக்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிசாரிடம் தஞ்சமடைந்ததாகவும் ஏற்கனவே நாம் செய்திகள் வெளியிட்டிருந்தோம். சம்பவத்தின் பின்னணி இதோ, சுன்னாகத்தை சேர்ந்த யுவதியொருவருக்கு தவறிய அழைப்பொன்று சென்றிருந்தது. வழக்கமாக, தவறிய அழைப்பின் பின்னர் நடக்கும் காதல் கதையே  அங்கும் நடந்தது. முகம் தெரியாமல் சுன்னாகம் யுவதியும், கொடிகாமம் இளைஞனும்...