மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சித்தாண்டி பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 21 வயது சந்தேகநபரொருவர் கைது செய்யபபட்டுள்ளார்.
சிறுமியின் காதலன் என கூறப்படும் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டாம் திகதி சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது வந்த சந்தேகநபர் அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்