காதலனுடன் போன் கதைக்க விடவில்லை என 15 வயது மாணவியின் விபரீத முடிவு

0 1,816

காதலனுடன் தொலைபேசியில் உரையாடுவதை கண்டித்ததால் மாணவியொருவர் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று (10) அதிகளவான மாத்திரை உட்கொண்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் மகாவித்தியாலத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவியே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி தொலைபேசியில் தனது காதலனுடன் நீண்டநேரமாக கதைத்துக் கொண்டிருந்துள்ளார். இதனை அவதானித்த உறவினர்கள் தொலைபேசியை பறித்தெடுத்ததுடன், அவரை கண்டித்துள்ளனர்.

காதலனுடன் பேச முடியாததால் மனமுடைந்த யுவதி, நேற்று முன்தினம் ஒருவகை மருந்துகளை உட்கொண்டுள்ளார்.

அவர் வாந்தி எடுப்பதை அவதானித்த உறவினர்கள் உடனடியாக தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.