Home Uncategorized வயிற்றில் கட்டி!! சத்திரசிகிச்சைக்கு சென்ற பெண் பலியான சோகம்!! யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

வயிற்றில் கட்டி!! சத்திரசிகிச்சைக்கு சென்ற பெண் பலியான சோகம்!! யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

15
0

கர்ப்பப்பை கட்டி காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத் துயர சம்பவம் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடந்துள்ளது.

வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த வினோதன் பரமேஸ்வரி, தங்கா என அழைக்கப்படும் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக இறந்துள்ளார்.
கடந்த வாரம் 2ம் திகதி வயிற்று குற்று காரணமாக இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை பரிசோதித்த வைத்தியர்கள், வயிற்றில் பாரிய கட்டி இருப்பதனையும் அதனை அகற்றாவிட்டால் ஏற்படும் பாதிப்புகளையும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மேலதிக பரிசோதனைகளில் இவரிற்கு பல வேறு வருத்தங்கள் இருப்பதுவும் தெரியவந்துள்ளது.
இதனால் அதனை எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து 10.06.2020 அன்று காலை 8 மணியளவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

பின்னர் சத்திர சிகிச்சை முடிவடைந்ததும் அவர் மேலதிக சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மறுநாள் 11.06.2020 இரவு சிகிச்சை பலனின்றி அவசர சிகிச்சை பிரிவில் அவர் இறந்துள்ளார்.

குறித்த பெண்ணின் இறப்பிற்கான காரணத்தை அறிய சடலமானது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மரண விசாரணையின் பின்னர் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இறுதி குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் நிலையில் மூன்று குழந்தைகளையும் தவிக்கவிட்டு குறித்த பெண்ணிற்கு நேர்ந்த துயர சம்பவம் அப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது