Home Uncategorized பிஞ்சு குழந்தைக்கு எமனான வைத்தியசாலை!! மூடி மறைத்த பணிப்பாளர்! கதறி அழும் வைத்தியர்!

பிஞ்சு குழந்தைக்கு எமனான வைத்தியசாலை!! மூடி மறைத்த பணிப்பாளர்! கதறி அழும் வைத்தியர்!

8
0

யாழில் வைத்தியசாலை பணிப்பாளர், மற்றும் சில ஊழியர்களின் அசமந்த போக்கினால் பரிதாபமாய் பலியான நான்கு மாத பிஞ்சு குழந்தை தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் மூச்சு கஸ்டம் மற்றும் காய்ச்சலுடன் நான்கு மாத குழந்தை ( தீபனா – வறணி ) ஒன்று யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இரவு 8 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த குழந்தையின் நோய் நிலமையின் தீவிரத்தை உணர்ந்த வைத்தியர் ஆரம்ப பராமரிப்புகளை வழங்கி, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்காக படிவங்களை தயார்படுத்தியுள்ளார்.

அத்தருணம் மூன்று நோயாளர் காவுவண்டிகள் இருந்துள்ளன. அதற்கான ஓட்டுனர்களாக இருவர் கடமையில் இருந்தும் உள்ளனர்.
ஆனால் உடனடியாக குறித்த குழந்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவில்லை.

மறுநாள் காலை விடுதிக்கு வந்த வைத்தியர் குழந்தை அனுப்பப்படாமைக்கான காரணத்தை வினாவியுள்ளார்.
ஒரு நோயாளிக்காக நோயாளர் காவுவண்டியை அனுப்பமுடியாது என்றும், பல நோயாளிகள் சேர்ந்த பின்னர் ஆட்டு மந்தைகளை அள்ளி செல்வது போல அனுப்பலாம் எனும் தொனியில் வழமை போல பதில் கிடைத்துள்ளது.

மேலும், ஒரு சாரதி ஓய்வு பெற இருப்பதால் அவர் செல்லமாட்டார் என்றும் பதில் கிடைத்துள்ளது.
அப்படியானால் மற்றய சாரதி எங்கே என வினாவியபோது அது அம்மாவை ஏத்த போய்விட்டார் என மறுபதில் கிடைத்துள்ளது.

நோயாளரின் நலனிற்காக பாவிக்கப்பட வேண்டிய அவசர நோயாளர் காவுவண்டியை தங்கள் சுகபோக வாழ்க்கைக்கா பயன்படுத்தும் இவர் போன்ற ஈனப்பிறவிகள் பலர் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்நிலையில் மதியம் இரண்டு மணியளவில் குறித்த அம்மணியின் தனிப்பட்ட தேவைகளை முடித்துக்கொண்ட நோயாளர் காவுவண்டி பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தையை சுமந்தபடி யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.

அங்கு மேலதிக சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட்டிருந்தாலும் கால தாமதத்தால் குழந்தை உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
பத்துமாதம் சுமந்தவளின் வேதனைகளை பாராது, என்னால்தான் குழந்தை உயிர் பறிபோனதே என்ற குற்ற உணர்வே இல்லாது வழமை போல பத்தில் ஒன்றாக இதுவும் பொய் சாயம் பூசி மறைக்கப்பட்டது.

இவர்களின் சுகபோக வாழ்க்கைக்காக வாகன வரி விலக்கு சலுகைகள், எரிபொருள் சலுகைகள், தொலைபேசி சலுகைகள் , தூக்க குழப்பத்திற்கான சலுகைகள் என அரசு வாரி வழங்குகின்ற போதும் இது போன்ற அற்பத்தனமான செயல்களினால் ஆங்காங்கே மறைமுகமாக பல உயிர்கள் காவுவாங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இதனைவிடவும் பலர் தங்களிற்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை முறைகேடாக பயன்படுத்தி சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றமை தொடர்பாகவும் தெரியவந்துள்ளது.

உதாரணமாக அரச அதிகாரிகளிற்கு 5 வருடங்களிற்கு இடமாற்றம் வருவது வழமையானது. ஆனால் 16 வருடங்களிற்கு மேலாகவும் தொடர்ச்சியாக இங்கு பலர் குப்பை கொட்டிக்கொண்டு இருப்பது யாருடைய செல்வாக்கில் என்பது புரியவில்லை.
பல கோடி செலவில் சத்திர சிகிச்சை கூடம் ஒன்று நிர்மானிக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளது.

ஆனால் இன்றுவரை அங்கு ஒரு சத்திர சிகிச்சை கூட நிகழவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மாறாக யாழ் போதனா வைத்தியசாலையின் கட்டில்கள், மெத்தைகள் என்பவற்றை பதுக்கி வைத்திருக்கும் கூடாரமாக இருப்பது இன்னும் வேதனைக்குரிய விடயமாகும்.

சிலரின் அலட்சிய போக்கினால் பெறுமதியான பல உபகரணங்கள் மற்றும் மருந்துகள் என்பன பழுதடைந்த நிலையில் காணப்படுவதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.
அரச சேவையில் அலட்சியம் செய்வோர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் மகத்தான மருத்துவ சேவையில் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை செய்வோரை உடனடியாக இனம்கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக உரியவர்களை கேட்டு நிக்கின்றோம்.