Home Uncategorized பலர் பாத்திருக்க பரிதாபமாய் பறிபோன இராணுவ வீரரின் உயிர்

பலர் பாத்திருக்க பரிதாபமாய் பறிபோன இராணுவ வீரரின் உயிர்

5
0

இன்று இலங்கையில் மூச்சுக்கஸ்டத்துடன் அவதிப்பட்ட இராணுவ உத்தியோகத்தருக்கு உதவி செய்ய மக்கள் அஞ்சியதால் ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ள துயர சம்பவம் அரங்கேற்றியுள்ளது.
இன்று மதியம் தம்புள்ளை பஸ்தரிப்பிட நிலையத்தில் இராணுவ உத்தியோகத்தர்
துஷாரா குமார ஜெயசிங்க
மூச்சுக்கஸ்டத்துடன் அரைமணித்தியாலயமாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருந்துள்ளார்.
கொரோனா தொற்று நோய் அச்சத்தில் நெருங்க பலர் பயத்தில் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துள்ள போது இரு பெண்கள் தாமாக முன்வந்து உரிய இராணுவ வீரருக்கு அருகில் சென்று அவர் சுவாசத்தினை பார்த்து உடனே முச்சக்ரவண்டியிற்கு அறிவித்து அதனை தொடர்ந்து வைத்தியசாலை கொண்டு சென்றுள்ளனர். அங்கு இராணுவ வீரர் மரணித்துள்ளார்.
தம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கழிப்பறைக்கு சென்ற இராணுவ சிப்பாய் தனது பயணப் பையை கழிப்பறைக்கு வெளியே வைத்து சென்றுள்ளார். வௌியே வந்த கழிப்பறைக்கு பணம் வழங்கும் திடீரென சிப்பாய் கீழே விழுந்துள்ளார்.
பார்ப்பதற்கு இராணுவ சிப்பாய் போன்று இருந்ததனை அறிந்துக் கொண்ட மக்கள், அரை மணி நேரம் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது
இரு பெண்கள் அவ் இராணுவ உறுப்பினருக்கு அருகில் நெருங்கி பார்க்கும் வரை பஸ்தரிப்பிட நிலையத்தில் நின்ற ஒருவரும் அவரிற்கு உதவி செய்ய முன்வரவில்லை
இராணுவ வீரர் மரணித்த பின் திரண்டவர்கள் வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம் சுவாசம் குறைந்து அவதிப்படும் போதே தம்புள்ள பஸ்தரிப்பிட நிலையத்திலிருந்து 500m தூரத்திலுள்ள வைத்தியசாலை கொண்டு செல்ல முயற்சி செய்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம்.
அனால் வேடிக்கை மட்டும் பார்த்த பலரால்  இன்று ஒரு உயிர் பறிக்கப்பட்டதோடு, இலங்கையில் மனிதாபிமானம் எங்கே உள்ளது என்பதை இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி வெளிக்காட்டுகின்றது.