Home Uncategorized கிளிநொச்சியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

7
0

காணாமல் போன மாணவன் இன்று (3) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பளை, முள்ளியடியை சேர்ந்த பாடசாலை மாணவனான ஆர்.அனோஜன் என்பவரே, இன்று புலோப்பளை கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரை காணவில்லையென கடந்த 28ஆம் திகதி பெற்றோரால், பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவன் பளை மத்திய கல்லூரியில் கடந்த வருடம் 2019ஆண்டு சாதாரணதர கல்வி பரீட்சை எழுதியிருந்தவர். சில தினங்களின் முன்னர் முடிவுகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.