அரச உயர் பதவிகளில் இருந்தாலும் முதிர்ச்சியான, பக்குவமான மனநிலை நமது அரச உத்தியோகத்தர்கள் பலரிடம் இருப்பதில்லை.
குறிப்பாக பெண்கள் தொடர்பான பார்வையில் காமுக்கர்களாக வரையறைக்கப்படுபவர்களிற்கும், நமக்கும் வித்தியாசமில்லையென அடிக்கடி பலர் நிரூபித்து வருகிறார்கள்.
அவ்வாறான ஒரு சம்பவத்துடன் இப்பொழுது சிக்கியுள்ளார் முசலி கிராம செயலகத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராம சேவகரும், முத்தரிப்புத்துறை மேற்கு கிராமத்தின் பதில் கடமை கிராம சேவகருமாகிய மரியான் சுரேஷ் டபறேரா.
வறுமையின் நிமிர்த்தம் வாழ்வாதார உதவி கோரல்களுக்கு செல்லும் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்று வந்த கிராமசேவகர் நேற்று பிற்பகல் சிலாவத்துறை பொலிசாரினால் கைது செய்யபட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில், குறித்த கிராம சேவகர் பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஸ்ரப்படுத்த கூடாது என்பதற்கான தான் வீட்டிலேயே கொண்டுவது தருவதாக தெரிவித்ததுடன் ஆவணத்துடன் முத்தம் ஒன்றும் தருவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை உடனடியாக முசலி பொலிஸாருக்கு பெண் கொண்டு சென்றதை தொடர்ந்து குறித்த கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிராம அலுவலர் ஆவணம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பாலியல் இலஞ்சம் கோரியதாக மனித உரிமை ஆணைக்குழு, மற்றும் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை சிலாவத்துறை போலீசாரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யபட்ட கிராம சேவகர் இன்று நீதிமன்றில் முற்படுத்த இருபதாகவும் குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது கணவரையும் இன்று சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்கு வருகை தருமாறும் பொலிசார் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல அரச அதிகாரிகளின் பாலியல் லீலைகளும் விரைவில் வெளிவர நீங்களும் இவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு முகம் கொடுத்திருந்தால் தயங்காமல் எமது புதுமை FM முகநூலிற்கோ அல்லது மின்னஞ்சல் முகவரியிற்கோ அனுப்பி வைக்கலாம்.