சிறுமி துஸ்பிரயோகம்!! கைதான இளைஞன் பிணையில் வந்து சிறுமிக்கு கொடுத்த பரிசு

0 74

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைதான இளைஞன், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அதே மாணவியை 3 மாத கர்ப்பிணியாக்கியுள்ளார்.

இதையடுத்து  அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

புஸல்லாவ பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன், சில காலத்தின் முன்னர் கம்பளை பகுதியை சேர்ந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்திருந்தார். இது குறித்த முறைப்பாடு கிடைத்ததும், கம்பளை பொலிசாரால் இளைஞன் கைது செய்யப்பட்டார்.

அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. விளக்கமறியில் வைக்கப்பட்ட இளைஞன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மாணவியும் மருத்துவ பரிசோதனையின் பின்னர். சிறுவர் நன்னடத்தை பிரிவில் தங்க வைக்கப்பட்டு, அண்மையில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

வீடு திரும்பிய இளைஞன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவியுடன் மீண்டும் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் மாணவி தற்போது 3 மாத கர்ப்பிணியாகியுள்ளார்.

இந்த தகவல் கிடைத்ததும், பொலிசாரால் இளைஞன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

குறித்த இளைஞன் கம்பளை நீதிமன்றத்தில் பொலிசாரால் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.