குறுக்கால் பாய்ந்த நாய்களால் நேர்ந்த விபரீதம்!! பரிதபமாய் பலியான சாரதி!! CCTV

0 83

திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று 26/09/2020 (சனிக்கிழமை) இரவு, 9.33 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவு சங்க சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அதி வேகமாக வந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் மீது மோதி நிலை குலைந்து, எதிரே அதி வேகமாக வந்த அதி சொகுசு வாகனத்துடன் மோதியதால் தூக்கி வீசப்பட்டது.

முச்சக்கரவண்டியுடன் மோதுண்ட சொகுசு வாகனம் மோதுண்ட பின்னர் அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதுண்டுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை – சோனக வாடி, மூர் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய நடராசா அனுஷாந்தன் என்பவராவார்.

இந்த விபத்தின்போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

Accident that killed the three wheeler driver

The three-wheeler driver died in an accident that happened around 9.30 pm on 26 (26) before the driver collided with a three-wheeler dog in the center of Trincomalee.

Gepostet von Accident videos am Samstag, 26. September 2020

குறித்த விபத்துக்கான காரணம் வீதியின் குறுக்காக பாய்ந்த நாய் ஒன்று என்பது அருகில் பொருத்தியிருந்த CCTV கமராவில் தெளிவாகிய நிலையில் நிலையில், குறித்த சொகுசு வாகனத்தின் உரிமையாளர் கிரீம் கவுஸ் ஒன்றின் சொந்தக்காரர் எனவும், குறித்த  வாகனத்தை ஓட்டியவர் தான் தான் என வேறு ஒருவர் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.