கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞன் பரிதாப மரணம்!

0 52

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி ரயிலுடன் இளைஞன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞன் அந்தப் பகுதியில் நீண்ட நேரமாகக் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இவர் வணிகத்துறையில் கல்வி கற்று 3 ஏ சித்தி எய்தியுள்ளார்.

மிக வறுமையான குடும்பத்தை சேர்ந்த அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை

இளைஞனின் உடல் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.